பிரதேச செயலகத்திற்கான நோக்கு
எமது சேவை பெறுனர்களுக்கு சிறந்த பயன்மிக்க , தரமான அரச சேவையினை பெற்றுக் கொடுத்து மாத்தளை மாவட்டத்தில் முன்மாதிரியானவொரு பிரதேச செயலகமாக்குதல்பிரதேச செயலகத்திற்கான பணிப் பிரகடனம
அரசாங்க கொள்கைகளுக்கிணங்க சேவைகளை வழங்குதல் , வளங்களின் தொடர்பிணைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடனான செயற்றிறன்மிக்க திட்டமிடப்பட்ட அபிவிருத்திச் செயன்முறை ஒன்றின் ஊடாக பிரதேசவாழ் மக்களின் வாழ்வினை மேலோங்கச் செய்தல்| அறிமுகம் மற்றும் அமைவிடம் |
மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை பிரதேச செயலகமானது மாத்தளை நகரத்தை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது.இப்பிரதேச செயலகம் மாத்தளை தேர்தல் தொகுதிக்கு உரித்தாவதுடன் கிழக்கில் ரத்தொட்டை மற்றும் அம்பன்கங்கை பிரதேச செயலகங்களையும் வடக்கில் நாவுல பிரதேச செயலகத்தையும் மேற்கில் யட்டவத்த மற்றும் பல்லேபொல பிரதேச செயலகங்களையும் தெற்கில் உக்குவலை பிரதேச செயலகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மாத்தளை பிரதேச செயலகம் சுமார் 71 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளதுடன் கண்டி நகரிலிருந்து 27கி.மீ. தூரத்தில் வடக்காக அமைந்துள்ளது.
| நிருவாகப் பிரிவு |
1985 ஆம் ஆண்டு வரை இன்றைய மாத்தளை பிரதேச செயலகப் பிரிவு மற்றும் யட்டவத்த பிரதேச செயலகப் பிரிவு ஆகிய இரண்டும் இணைந்துவொரு நிருவாக அலகாக மாத்தளை உதவி அரசாங்க அதிபர் பிரிவென காணப்பட்டது. எனினும் 1985 ஆம் வருடத்தில் மாத்தளை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் மேற்குப் பகுதி யட்டவத்த எனும் பெயரில் தனியான நிருவாக அலகொன்றாக பிரிக்கப்பட்டது. அத்துடன் தென்பகுதியில் அமைந்திருந்த 06 கிராம அலுவலர் பிரிவுகள் உக்குவலை பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டது. அதற்கிணங்க 19 கிராம அலுவலர் பிரிவுகளை கொண்ட மாத்தளை பிரிவு 1989 ஆம் வருடத்தில் கிராம அலுவலர் பிரிவுகள் பிரிக்கப்பட்தற்கேற்ப 52 ஆக மாறியது. இந்த பிரிவிலுள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 224 ஆகும். இக்கிராமங்களில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை 21124 ஆவதுடன் மொத்த சனத்தொகை 87578 ஆகும்.
| வரலாற்றுப் பின்னணி |
வலகம்பா மன்னனின் காலத்தில் (கிமு.89-77) மாத்தளை அலுவிகாரையில் திரிபீடகம் புத்தக வடிவத்தில் உருவாக்கப்பட்டதனால் மாத்தளை வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றது. அதற்கேற்ப கி.மு. நூற்றாண்டுகளில் மாத்தளையில் மக்கள் வாழ்ந்தமைக்கான உறுதியான சாட்சிகள் உள்ளன. மகாநில என்பது மாத்தளையின் மிகப் பழைய பெயராகும்.மாத்தளை என்ற பெயர் உருவானது தொடர்பான பழங்காலக் கதைகள் அநேகம் உள்ளன. மிகப்பெரிய திடல் என்ற அர்த்தத்தை கொண்ட மகாதல என்ற சொல் பிரயோகிக்கப்பட்டது. அது காலப்போக்கில் மாத்தளை என திரிபடைந்ததாக பழங்காலக் கதைகளில் கூறப்படுகின்றது.
இது தவிர கஜபா மன்னன் சோல நாட்டிலிருந்நு கொண்டுவந்த பன்னிரெண்டாயிரம் கைதிகளில் மிகப்பெரியவொரு குழு மாத்தளையில் நிறுத்தப்பட்தாகவும் , பாரிய கூட்டம் அல்லது திடல் என்ற அர்த்தத்தை கொண்ட மகாதலய என்ற சொல் பிரயோகிக்கப் பட்டதாக பழங்காலக் கதைகளில் கூறப்படுகின்றது. 1848 ஆண்டில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக உருவான கிளர்ச்சியில் மாத்தளைப் பிரதேசமே தலைமையகமாக இருந்நது. இக்காரணத்தினால் இது மாத்தளை கிளர்ச்சியென அறிமுகப் படுத்தப்பட்டது. இதுதான் மாத்தளை வரலாற்று ரீதியாக முக்கியதுவம் பெறுவதற்கு காரணமாயிருந்தது.
| பூகோல அமைவிடமும் மற்றும் பூகோல மாற்றங்களும் |
மாத்தளை பிரதேச செயலகப் பிரிவு மாத்தளை மாவட்டத்தில் தெற்குதிசையிலிருந்து வடதிசையாக ஒரு சரிவாக அமைந்த ஒடுக்கமான பிரதேசமாக அமைந்துள்ளது. பிரதேசத்தின் பொதுவான உயரம் கடல் மட்டத்திலிருந்து 500 - 1200 மீற்றர் வரையாகும். கூடிய வெப்பநிலையை கொண்ட பிரதேசம் தென்மேல் மற்றும் மேற்கு பிரதேசமாக அமைந்துள்ளது. எதிபொல மலை(வில்ஷயார்) அஸ்கிரி மலை,மகுலுஸ்ஸ மலை என்பன இங்குள்ள பிரதான மலை உச்சிகளாகும். இது மாத்தளை பிரதேசத்திற்கு மிகக்கூடிய சரிவைக்கொண்டு அமைந்துள்ளதுடன் இது மாத்தளையை சூலஅமைந்துள்ளதெனக் கூறலாம். மாத்தளை நகரமத்தியிலிருந்து நோக்கும்போது இதனை மிகஇலேசாக கண்டுகொள்ளலாம்.
| நீர் மற்றும் காலநிலை, வெப்பநிலை |
பிரதானமாக வடதிசைக்கு சரிவாக அமைந்துள்ள இப்பிரதேசத்தின் கிழக்கு எல்லையில் தெற்கிலிருந்து வடக்குதிசையில் அம்பன்கங்கையின் கிளை ஆறாகிய சுதுகங்கை ஓடுகின்றது. வேறு பாரிய நீரோடங்கள் இல்லாததுடன் மேற்கு மலை உச்சகளிருந்து ஆரம்பிக்கும் நீரோடங்கள் சில சுதுகங்கையுடன் இணைகின்றது. இந்த நீரோடங்கள் ஒரு வளமான தன்மையினைக் காட்டுகின்றது. உக்குவலை மின்உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் நீரானது சுதுகங்கையூடாக அம்பன்கங்கையில் சேருகின்றது.
இப்பிரதேசத்தில் சிறிய நீரோடங்களைப் பயன்படுத்தி சுமார் 55 அணைகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணைகட்டுகளினூடாக அதிகபட்சம் 20 – 30 ஏக்கர் கொண்ட சிறிய அளவு நிலபரப்புக்கு நீர்பாசன வசதி வழங்கப்படுகின்றது. நாட்டின் மத்திய மலை பிரதேசம் மற்றும் வடக்குதிசை சமவெளிக்கிடையே அமைந்துள்ள ஒரு இடைப்பட்ட பிரதேசமாகையினால் மாத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தெற்குத்திசைக்கு வருடத்தின் எல்லா காலங்களிலும் சமமான மழைவீழ்ச்சியொன்று கிடைக்கின்றது. மார்ச் மாத இறுதிப்பகுதி மற்றும் ஏப்ரல்,மே,ஜுன் மாதங்களில் மற்றும் ஒக்டோபர்,நவம்பர் மாதங்களிலும் கூடிய மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. பொதுவாக மழைவீழ்ச்சி சுமார் 110 மி.மீ. ஆகும். கூடிய வெப்பநிலை 300 செல்சியஸ் ஆவதுடன் குறைந்த வெப்பநிலை 170 செல்சியஸ் ஆகும்.












